கொலை பற்றிய தகவல்கள் தருபவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பவுன்கள் வரை சன்மானம்கொலை பற்றிய தகவல்கள் தருபவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பவுன்கள் வரை சன்மானம்

கடந்த மே மாதம் 26ம் திகதி வட்போர்ட் கொஸ்ட்கோ மொத்த விற்பனை நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த 34 வயதுடைய இளம் தந்தை மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதால் பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை நடாத்துகின்றார்கள்.

லண்டனில் இரண்டு பல்பொருள் கடைகளை நடாத்தி வந்த இளம் வர்த்தகரான பிரசன்னா அருள்செல்வமின் மரணம் கொலையென நம்பப்படுவதால் இச் சம்பவம் தொடர்பாக தகவல்கள் தருபவர்களுக்கு 50 ஆயிரம் வரையான வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் வெகுமதியை குற்றத்தடுப்பு பிரிவும் பல்பொருள் கடைகளின் கூட்டமைப்பும் வழங்க முன்வந்துள்ளது.

பல்பொருள் கடைகளின் கூட்டமைப்பின் நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் லோவ்மன் கூறுகையில்; இந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நாம் இறந்தவருடைய குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பதுடன் குற்றத்தடுப்புப் பிரிவினூடாக குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க பொலிசாருக்கு ஆதரவாக இருகின்றோம் என தெரிவித்தார்.

அன்றையதினம் பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரசன்னா வெள்ளை நிற பேர்ஜோ வானிலிருந்து கீழே விழுவதை கண்காணிப்புக் கமெரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து இவ் வான் தொடர்பான தகவல்களையும் பொலிசார் எதிர்பார்கின்றார்கள்.

news_0328_280613_s

தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் :

சம்பவத்துக்கான நேரடி இலக்கம் – 01707 355959

குற்றத்தடுப்புப்  பிரிவு  – 0800 555 111

asa      costco-(hc)-22k1109

இச்சம்பவம்தொடர்பானஏனைய செய்திகள்:

http://www.vanakkamlondon.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

ஆசிரியர்