லண்டனில் “சுப்பர் சிங்கர் UK” பிரமாண்டமாக நடைபெற உள்ளது லண்டனில் “சுப்பர் சிங்கர் UK” பிரமாண்டமாக நடைபெற உள்ளது

லண்டன் beats பிரித்தானியாவில் நடாத்தும் சுப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சி இம்மாதம் 19ம் திகதி லண்டன் குரோய்டன் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டபோதிலும் கடந்த காலங்களில் பல்வேறு மட்டங்களில் நடாத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து கனிஷ்ட பிரிவில் 5 போட்டியாளர்களும் சிரேஷ்ட பிரிவில் 5 போட்டியாளர்களும் இறுதித் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு பிரிவுகளில் இருந்தும் இரண்டு டைட்டில் winner களை எதிர்வரும் 19ம் திகதி தெரிவு செய்ய உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தென்னிந்திய திரையிசை பின்னணிப்பாடகர் சின்னக்குயில் சித்திரா கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். இவருடன் அனகா சாடன், சத்திய பிரகாஷ், கல்யாண சுந்தரம் போன்றோரும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

தமிழ் நாட்டில் பல வருடங்களாக நடைபெறும் இவ்வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிமூலம் பல திறமைவாய்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்தது. அதேபோல் சிறந்த சந்தர்ப்பமொன்று பிரித்தானிய திறமையாளர்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

இந்த மாபெரும் போட்டி நிகழ்வை லண்டனில் உள்ள பிரான்கோ குரூப் நிறுவனத்தின் அனுசரணையில் லண்டன் Beats நடாத்துகின்றது. மேலதிக விபரங்களுக்கு : http://www.supersingeruk.co.uk/

இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள போடியாளர்களின் விபரம்;

Junior

Subeetsan Thuraivan – SS01

Shreyas Sreevats – SS03

Akshanya Arunthavarajah – SS05

Thenuga Sivanesarajah – SS07

Naveena Pranavarooban – SS10

Senior

Gnanamayi Gunabalaratnam – SS02

Kiruba Iyer – SS04

Yarlinie Thanabalasingham – SS06

Bensia Don Bosco – SS08

Punya Selvamurugananthan – SS09

A3 Poster-1

ஆசிரியர்