பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கோரியும்  யாழ். மாவட்டத்திலுள்ள  பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக கூடிய சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பெண்களுக்கு எதிரான வன்முறை அற்ற சமுதாயத்தை எமது எதிர்காலத்தில்; ஆக்குவோம்’, ‘நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோம்”, ‘சட்டமூல அமுலாக்கம் எங்கே? அதை உறுதிப்படுத்தியவர்கள் எங்கே’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

aadc

ஆசிரியர்