உலகளாவிய லஞ்சம்: தரவரிசை பட்டியலில் பிரிட்டன் 14 வது இடம்உலகளாவிய லஞ்சம்: தரவரிசை பட்டியலில் பிரிட்டன் 14 வது இடம்

c1

ஜெர்மனைச் சேர்ந்த சர்வதேச ஒளிவுமறைவற்ற அமைப்பு லஞ்சம் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கைப்படி  உலகின் அதிகம் லஞ்சம் பாதித்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 14வது இடத்திலும், இந்தியா 94வது இடத்தில் உள்ளது. மேலும் அதிகமாக லஞ்சம் தலைவிரித்தாடும் நாடு சோமாலியா என்றும், டென்மார்க் மற்றும் நியூஸிலாந்தில் லஞ்ச லாவண்யங்கள் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயுவு அரசுத் துறைகளில் நிலவும் லஞ்சத்தின் அடிப்படையில்  நடத்தப்பட்டு, அதனடிப்படையில், 177 நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டும் இதே இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆய்வறிக்கையின் தரவரிசை பட்டியல் படி ஜெர்மனி 12வது இடத்திலும், ஹாங்காங் 15வது இடத்திலும், ஜப்பான் 18வது இடத்திலும், அமெரிக்கா 19வது இடத்திலும், சீனா 80வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் 72வது இடங்களிலும், இலங்கை 91வது இடத்திலும் பாகிஸ்தான் 127வது இடத்திலும், தாய்லாந்து 102வது இடத்திலும், மெக்ஸிகோ 106வது இடத்திலும், எகிப்து 114வது இடத்திலும்,  நேபாளம் மற்றும் வியத்நாம் 116வது இடத்திலும், வங்கதேசம் 136வது இடத்திலும்,, ஈரான் 136வது இடத்திலும் உள்ளன.

இது குறித்து சர்வதேச ஒளிவுமறைவற்ற அமைப்பின் தலைவர் ஹ்யூகட்டே லாபெல்லே கூறும் போது  “”உலகில் அனைத்து நாடுகளிலும் லஞ்சம் பரவியுள்ளது. இது சாதாரண அலுவலர் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை லஞ்சம் பரவியிருப்பது  அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.

 

 

ஆசிரியர்