நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. யாழ். தொண்டர் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. தொண்டர் ஊழியர்கள் அனைவரும் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் வரை தங்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அந்த சங்கத்தின் தலைவர் எஸ். ஈழவளவன் தெரிவித்துள்ளார்.
