16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு !!16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு !!

 

16 மாதகாலமாக கடலில் தத்தளித்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் மெக்ஸிகோவிலிருந்து 12,500 கிலேமீற்றர் தூரம் படகொன்றிலிருந்தவாறு தத்த ளித்து வந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நபரின் 24 அடி நீளமான பைபர் இழைப் படகு மார்ஷல் தீவுக்கூட்டத்தைச் சேரந்த எபோன் தீவுக்கு அருகில் உள்ளூர்வாசிகள் இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மெலிந்த தேகத்துடனும் நீண்ட தலைமயிருடனும் தாடிமீசையுடனும் இந்நபர் காணப்படுகிறார்.

 

இந்நபர் ஸ்பானிய மொழி மாத்திரம் பேசுவதாகவும் தனது பெயர் ஜோஸ் ஐவன் எனவும் அவர் கூறுகிறார். 2012 செப்டெம்பரில் மெக்ஸிகோவிலிருந்து எல் சல்வ டோருக்கு தனது நண்பர் ஒருவருடன் பயணத்தை ஆரம்பித்தாகவும் பல மாதங் களுக்கு முன் தனது நண்பர் இறந்துவிட்டதாகவும் ஜோஸ் ஐவன் தெரிவித்துள்ளார். எபோனின் ஆய்வில் ஈடுபட்டுள்ள நோர்வையைச் சேர்ந்த மானுடவியல் மாண வரான ஒலா பிஜேல்ஸ்டட் என்பவர், ஜோஸ் ஐவனின் படகை ஆராய்ந்தபின், அப்படகு நீண்டகாலமாக கடலில் இருந்தமைக்கான தடயங்கள் தென்படுவதாக கூறியுள்ளார்.

 

மேற்படி படகு 12,500 கிலோமீற்றர் தூரம் தத்தளித்த நிலையில் சென்றுள்ளதாகவும் ஒலா பிஜேல்ஸ்டட் மதிப்பிட்டுள்ளார். ஆமைகள், பறவைகள், மீன்கள் ஆகிய வற்றை உட்கொண்டு தான் உயிர்வாழ்ந்ததாகவும் மழை இல்லாத காலங்களில் ஆமை இரத்தத்தை குடித்ததாகவும் ஜோஸ் ஐவன் தெரிவித்துள்ளார்.

 

 

ஆசிரியர்