விடுமுறையில் சென்ற ஆண் பொலிஸ் அதிகாரி பெண்ணாக உருமாறி வந்தார்விடுமுறையில் சென்ற ஆண் பொலிஸ் அதிகாரி பெண்ணாக உருமாறி வந்தார்

 

33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த பொலிஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.

பிரேஸிலின் கொயானா எனும் நகரில் பொலிஸ் திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி வரும்போது பெண்ணாக வந்தார்.

பெண்ணைப் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக அவர் தனது உடலிலும் முகத்திலும் பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டார். அடுத்த மாதம் இவர் மீண்டும் பொலிஸ் பணியில் ஈடுபடவுள்ளாராம். தனது சகாக்கள் தன்னைப்பற்றி என்ன கூறுவார்களோ என ஆரம்பத்தில் தான் கவலை கொண்டதாகவும் ஆனால் இதுவரை தான் சந்தித்த பழைய சாகாக்கள் அனைவரும் எதுவும் நடைபெறாததைப் போல் வழமைபோன்றே தன்னுடன் உரையாடியதாகவும் கொஸ்டா கூறியுள்ளார்

ஆசிரியர்