கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்பின் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்பின் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்பின் விசேட  கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணிக்கு பூநகரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் ம.சுந்தரமூர்த்தி தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியது. இதில் கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக பேருந்து தரிப்பிடம் இன்மை மற்றும் மலசலகூட வசதிகள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், கல்வி நிலைமை ஆகியவை ஆராயப்பட்டதுடன் இதனை இந்த சபையூடாக பெறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்து தீர்விணை பெறவேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக

 

a1

a2

a4

 

ஆசிரியர்