ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பித்தது அமெரிக்கா | நம்பகத் தன்மையான சுயாதீன விசாரணைக்கு கோரிக்கைஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பித்தது அமெரிக்கா | நம்பகத் தன்மையான சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இல­ங்கைக்கு எதி­ரான மூன்­றா­வது பிரே­ர­ணையை நேற்­றைய தினம் சமர்ப்­பித்­துள்ள அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன.

அத்­துடன் இல­ங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்­நுட்ப உத­வியும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் இலங்­கை­யா­னது பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் மனித உரிமைப் பேர­வை­யுடன் ஒத்­துழைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அமெ­ரிக்­கா­கவும் பிரிட்­டனும் கூட்­டாக மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்ள பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நேற்­றுக்­காலை 9 மணிக்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் ஆரம்­ப­மா­னது. இத­னை­ய­டுத்து சுவிட்­சர்­லாந்து நேரப்­படி நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்­ளது.

”இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்கம் மற்றும் மனித உரி­மையை ஊக்­கு­வித்தல் ” என்ற தலைப்பில் அமெ­ரிக்கா சமர்ப்­பித்­துள்ள இந்த பிரே­ர­ணைக்கு பிரிட்டன் மொன்­ட­னேக்ரோ மெச­டோ­னியா மற்றும் மொரி­ஷியஷ் ஆகிய நாடுகள் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளன.

பிரே­ர­ணையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் வரு­மாறு

1. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையை வர­வேற்­கின்றோம்.

2. இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். மேலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­த­வேண்டும்.

3. கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நிறை­வேற்ற மேல­திக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதில் நீதி, சமத்­துவம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அனைத்து மக்­க­ளுக்­கு­மான நல்­லி­ணக்கம் உறு­தி­ப்ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

4. நாட்டில் மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். கோவில், பள்­ளி­வாசல் போன்­றவை மீது எதிர்­கா­லத்தில் தாக்­குதல் நடத்­தப்­ப­டாமல் தடுக்க நட­வ­டிக்கை வேண்டும்.

5. வெலி­வே­ரிய பகு­தியில் படை­யி­னரால் ஆயு­த­மற்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

6. வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்­வரும் உரிய முறையில் இயங்­கு­வ­தற்கு இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய அதி­கா­ரங்­களும் வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

7. அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யா­ளரை இலங்கை வர­வ­ழைத்­த­மையை வர­வேற்­கின்றோம். அத்­துடன் விசேட ஆணை­யா­ளர்­க­ளுடன் ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றோம்.

8. இலங்­கையில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளையின் கோரிக்­கையை வர­வேற்­கின்றோம். தற்­போ­தைய பிரே­ரணை தொடர்பில் பேர­வையின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்­மூல விளக்­கமும் 28 ஆவது அமர்வில் முழு­மை­யான அறிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.

9. இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படவேண்டும்.

10. இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்.

இதேவேளை, ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுயாதீன விசாரணை மட்டுமே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர்