கிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ்.தேவிகிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ்.தேவி

unnamed (13)

கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் உதவியுடன் புகையிரதப் பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய பணிகள் நிறைவடைந்து ஓமந்தையிலிருந்த கிளிநொச்சி நோக்கிய சேவை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய சேவைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

-கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக- 

unnamed (12)

unnamed (11)

unnamed (10)

 

 

ஆசிரியர்