April 1, 2023 5:34 pm

வீதியை மூடி நபரின் பிறப்புறுப்பை தேடிய பொலிஸார் வீதியை மூடி நபரின் பிறப்புறுப்பை தேடிய பொலிஸார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீதியொன்றை மூடி நபரொருவரின் வெட்டி துண்டாக்கப்பட்ட பிறப்புறுப்பை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட விநோத சம்பவம் பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

40 வயதான குறிப்பிட்ட நபர் தமது கூட்டத்தை சேர்ந்த ஒருவரின் காதலியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையறிந்த நாடோடி கும்பலொன்று அந்நபரை தாக்கி அவரது பிறப்புறுப்பை வெட்டி துண்டித்துள்ளது.

இந்நிலையில் மிடில்ஸ் பரோவில் ஏ 66 வீதியில் மேற்படி நபர் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வலியால் துடித்துக்கொண்டிருப்பதை பொலிஸார் கண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதேசமயம் அவரது காணாமல் போன பிறப்புறுப்பை தேடி அவருக்கு மீளவும் பொருத்தும் முகமாக னை குறிப்பிட்ட வீதியை மூடி தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரின் வெட்டப்பட்ட பிறப்புறுப்பை பொலிஸார் தேடிக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

download (2)

Untitled

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்