லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5.1 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஒன்று உணரப்பட்டது. கடைகளில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடப்பதாகவும், நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் கவிழ்ந்து கிடப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி வந்ததால் நகர் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.

இந்த பூகம்பத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை. டுவிட்டர் இணையதளத்தில் பூகம்ப சேதம் குறித்து பலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். கண்ணாடிகள் பல உடைந்ததாகவும், கேஸ் லீக் ஆவதாகவும், தண்ணீர்க்குழாய்கள் உடைந்து சாலைகள் முழுவதும் தண்ணீர் கொட்டி வருவதாகவும், அந்தந்த பகுதியில் இருந்து வரும் பலர் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

தெற்கு கலிபோர்னியா பகுதியில் 2000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சமூக இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 8 பேர் வரை உயிர் இழந்துள்ளதாகவும், $360 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

quake29n-2-web

0

imageLT

ஆசிரியர்