முதுகு வலி சிகிச்சைக்காக சென்ற பெண், திடீரென குழந்தை பெற்றுள்ளார்.முதுகு வலி சிகிச்சைக்காக சென்ற பெண், திடீரென குழந்தை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Dover, Kent என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், முதுகுவலிக்கு சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு திடீரென ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sophie Aldridge என்ற 20 வயது பெண், கடந்த ஞாயிறு அன்று கடுமையான முதுகு வலி காரணமாக சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்த பின்னர் வீடு திரும்பினார். அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. பீரியட் நேரம் என்பதால்தான் வயிறு வலிப்பதாக நினைத்து உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவர்கள் அவருடைய வயிற்றை சோதனை செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருடைய வயிற்றில் இருந்து ஒரு ஆண் குழந்தை வெளியே வந்ததால் Sophie Aldridge உள்பட மருத்துவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து Sophie Aldridge அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது “எனக்கு எப்படி கர்ப்பம் உண்டானது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பீரியட் சரியாக வந்து கொண்டுதான் இருந்தது. குழந்தை வயிற்றில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் எனக்கு தெரியவில்லை. 8வது மாதம் வரை இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் இருந்தேன். இன்று திடீரென வயிறு வலித்ததால் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு எதிர்பாராமல் குழந்தை பிறந்துள்ளது என்று கூறிய அவர், எது எப்படி இருந்தாலும், இது என் குழந்தைஇ இந்த குழந்தைக்கு நான் ஒரு பொறுப்புள்ள தாயாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sophie-Aldridge_62_1948811a

ஆசிரியர்