சிறு வயதில் தாத்தாவாக மாறிய கொலைக்குற்றவாளிசிறு வயதில் தாத்தாவாக மாறிய கொலைக்குற்றவாளி

பிரிட்டன் சிறையில் இருக்கும் கொலைக்குற்றவாளி ஒருவர் 28 வயதில் தாத்தாவாக கூடியவிரைவில் மாற இருக்கிறார். அவருடைய 13 வயது மகள் தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.

பிரிட்டனில் கடந்த 2003 ஆம் ஆண்டு கொலை குற்றம் ஒன்றிற்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் 13 வயது மகள் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக ஃபேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது தந்தை தன்னை தனிமையில் விட்டுவிட்டு சிறைக்கு செல்லும்போது தனக்கு இரண்டு வயதுதான் என்றும், அதன் பின்னர் தன்னுடைய தாய் தன்னை ஒரு அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டார் என்றும், அவருக்கு தற்போது இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட அந்த பெண், தற்போது தனது ஆண் நண்பர் ஒருவரால் தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய புகைப்படத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அவருக்கு பலர் வாழ்த்துக்களும், ஒரு சிலர் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். கூடியவிரைவில் குழந்தையை பெற்று நீங்களும், உங்கள் பாய்பிரண்டும் அந்த குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோராக இருக்கவும் என்று பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தால், சிறையில் இருக்கும் இவருடைய தந்தை பிரிட்டனின் மிக இளவயது தாத்தா என்ற பெருமையை பெறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் ஷ்யாம் டேவிஸ் என்ற 29 வயது நபர் பிரிட்டனின் இளவயது தாத்தா என்ற பெருமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய 14 வயது மகள் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்ததால் அவர் அந்த பெருமையை பெற்றார்.

ஆசிரியர்