Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பலி வாங்குவதற்காக காபியில் பாதரசம் கலந்து டாக்டருக்கு கொடுத்த நர்ஸ் கைது. பலி வாங்குவதற்காக காபியில் பாதரசம் கலந்து டாக்டருக்கு கொடுத்த நர்ஸ் கைது.

பலி வாங்குவதற்காக காபியில் பாதரசம் கலந்து டாக்டருக்கு கொடுத்த நர்ஸ் கைது. பலி வாங்குவதற்காக காபியில் பாதரசம் கலந்து டாக்டருக்கு கொடுத்த நர்ஸ் கைது.

2 minutes read

இங்கிலாந்து நாட்டில் உள்ள Shefford என்ற நகரில் டாக்டர் ஒருவரை அவருடன் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் Shefford நகரில் Laura Knowles பெண் மருத்துவரும், அவருக்கு துணையாக Ravinder Kaur என்ற பெண் நர்சும் பணிபுரிந்து வந்தனர். Ravinder Kaur ஒரு நோயாளிக்கு சிகிச்சை தர வந்தபோது, அந்த நோயாளி அந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனவே அவர் சாப்பிடும் வரை நர்ஸ் Ravinder Kaur, அந்த அறையில் நோயாளியின் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த டாக்டர் Ravinder Kaur, நோயாளியின் நாற்காலியில் உட்கார்ந்ததற்கு கடுமையாக திட்டினார். நோயாளி முன் தன்னை திட்டியதற்காக டாக்டரை பழிவாங்க நினைத்தார் நர்ஸ்.

வழக்கமாக மாலை நேரத்தில் காபி கொடுக்கும் நர்ஸ் அன்றைய தினம், காபியில் பாதரசத்தை கலந்து கொடுத்தார். காபியை சிறிது குடித்ததுமே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த டாக்டர் Laura Knowles, உடனடியாக வாஷ்பேஷனில் வாந்தி எடுத்தார். பின்னர் காபியை சோதனை செய்தபோது, அதனடியில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து Laura Knowles அவருடைய நர்ஸ் Ravinder Kaur மீது போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நர்ஸ் Ravinder Kaur  கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் செய்த குற்றம் உறுதியானால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

DENTAL NURSE RAVINDER KAUR APPEARS AT BLACKFRIARS CROWN COURT

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More