சிலி நாட்டின் தலைநகரில் தீ விபத்து | 16 பேர் பலிசிலி நாட்டின் தலைநகரில் தீ விபத்து | 16 பேர் பலி

chili-fire

சிலி நாட்டின் தலைநகரைச் சுற்றியுள்ள மலைப்பகுடியில் நேற்று திடீர் என தீ பற்றிக்கொண்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 16 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10 ஆயிரம் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. தீயணைப்பு பணியில் 20 விமானப்படை விமானங்கள் மற்றும் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்ட படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் . நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து ஆராய ஒரு குழு அமைக்கபப்ட்டுள்ளது.

ஆசிரியர்