பெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தல் | கேரள வாலிபர் கைதுபெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தல் | கேரள வாலிபர் கைது

sdfg

பெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரித்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக குவைத், துபாய், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் மும்பை, சென்னை விமான நிலையங்கள் வழியாக பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய விமான நிலையங்கள் வழியாக கடந்த 6 மாதங்களில் மட்டும் 100 கிலோவுக்கும் அதிகமான அளவில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்