எப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 1 கோடி பவுண்எப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 1 கோடி பவுண்

பார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முன்வந்துள்ளார்.

எஸ்ஸெக்ஸ் கவுண்டி எனப்படும் நகராட்சியின் தலைவருக்கு சொந்தமான காரில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த நம்பர் பிளேட் இளம் டிரைவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏலம் விடப்பட்டது.

யார்க் ஷய்ர் நகரில் உள்ள பிரபல கார் பிரியரான அப்சல் கான் என்பவர் இதை 4 லட்சத்து 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்து, தனது அதிநவீன ‘புகட்டி வெய்ரான்’ காரின் பதிவு எண்ணாக பயன்படுத்தி வந்தார்.

சமீபத்தில், மத்திய கிழக்கு நாட்டில் வசிக்கும் ஒருவர் இந்த நம்பர் பிளேட்டை வாங்க விரும்பி 85 லட்சம் பவுண்டுகளுக்கு விலை கேட்ட போது, அதை விற்க மறுத்து விட்ட அப்சல் கான், ஒரு நிறுவனத்திடம் அதை விற்பனை செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

ஆசிரியர்