தொலைபேசித் தகவலை சீர்குலைத்த மோசடி வழக்கில் பிரிட்டன் பிரதமர் கேமரூனின் உதவியாளர் ஆன்டி கூல்சனுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிட்டன் பிரதமராக கேமரூன் இருந்தபோது தகவல் தொடர்புத் துறைத் தலைவராக பணியாற்றியவர் கூல்சன்(46). இவர் மீது லண்டனில் உள்ள பழைய பெய்லி நீதிமன்றத்தில் தொலைபேசி மூலம் அனுப்பப்படும் “வாய்ஸ் மெயில்’ தகவல்களை சீர்குலைத்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட தீர்ப்பில், கூல்சன் உள்பட “நியூஸ் ஆப் தி வேல்ர்ட்’ பத்திரிகையில் பணியாற்றிய 5 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
0