December 7, 2023 3:17 am

— பிரிட்டன் தலைநகர் லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்— பிரிட்டன் தலைநகர் லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீன ஆதரவாளர் ஏராளமானோர் திரட்டு இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இஸ்ரேலுக்கு உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் எதிரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்