உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண் துருக்கியில் உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண் துருக்கியில்

 

துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் உலகின் மிக உயரமான பதின்ம வயது (டீன் ஏஜ்) பெண் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

17 வயதுடைய அவரது உயரம் 7 அடி.

11-ஆம் வகுப்பு படித்து வரும் அவருக்கு, துருக்கியிலுள்ள அவரது சொந்த ஊரான சஃப்ரான்போலுவில், அண்மையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ருமேசா, “”வெளியில் நான் போகும்போது என்னை அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். இருந்தாலும் நான் அதற்காக சங்கடப்படுவதில்லை. மாறாக, மற்றவர்களிலிருந்து நான் மாறுபட்டிருப்பதாக பெருமை கொள்வேன்.

உயரமாக நின்று, பிறரைக் குனிந்து பார்ப்பதே அலாதியானதுதான்.

சிறந்த மனிதர்களால் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில் நானும் என்னைச் சிறந்தவளாக உணர்கிறேன்” என்றார்.

“வீவர் சிண்ட்ரோம்’ எனப்படும் அபூர்வ நோய் காரணமாக அவருக்கு அதீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர்