1945–ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் 1945–ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம்

ஜப்பான் ஹீரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் அடைந்தார்.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத துயர சம்பவமாகும்.

கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.

அதன் பின்னர்தான் இண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன்பின்னர் அந்த இரு நகரங்களிலும் ஏற்பட்ட துயர சம்பவங்கள் எண்ணி லடங்காதவை ஆகும். உலக வரலாற்றில் அழிக்க முடியாத இந்த துயர சம்பவத்தில் அமெரிக்காவின் ‘எனோலா கே’ என்ற விமானிகள் குழு மறக்க முடியாத அங்கமாக உள்ளது.

ஜப்பானின் ஹிரோஷி மாவில் அணுகுண்டு வீசிய அக்குழுவில் 24 வயது நிரம்பிய தியோடர் வன்கிர்க் என்ற விமானியும் இடம் பெற்றிருந்தார். நெதர்லாந்தை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

தற்போது ஜார்ஜியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த அவர் தனது 93 வயதில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித் துள்ளார்.

அவரை இரண்டாம் உலகப்போரின் ‘ஹீரோ’ என்பார்கள். என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தை ஆக இருந்தார். குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர உதவி செய்ததாக கூறுவார்’’ என்றார்.

மரணம் அடைந்த தியோடர்வன் கிர்க்கின் இறுதி சடங்கு அடுத்தவாரம் பென்சில்வேனியாவில் நடைபெற உள்ளது. அவர் வீசிய வெடிகுண்டு ‘லிட்டில் பாய்’ என பெயரிடப்பட்டிருந்தது. இவருடன் இருந்த உதவியாளர் மோர்கில் ஜெப்சன் கடந்த 2010–ம் ஆண்டு இறந்தார்.

ஆசிரியர்