தமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகள் மூடி உண்ணாவிரத போராட்டம்-ஜெயலலிதாவுக்கு ஆதரவுதமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகள் மூடி உண்ணாவிரத போராட்டம்-ஜெயலலிதாவுக்கு ஆதரவு

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட் டதை கண்டித்து தியேட்டர்களில் நாளை 4 காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்கபட்டது. பின்னர் கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முழு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் நாளை ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்