Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

1 minutes read

வவுனியாவில் ‘நாங்கள்’ இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்பாட்டம். வவுனியா,நகரசபை மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
நாளைய தினம் 67 ஆவது சுதந்திர தினத்தை இலங்கை அரசாங்கம் கொண்டாடவுள்ள நிலையில், ‘நாங்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கு பகுதியில் காணாமல் போனோரின் உறவுகள் நேற்றும் இன்றும் போராடட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும். ‘அரசியல் கைதிகள்’ எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்’, ‘நாங்கள் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, ‘புதிய அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் தா’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்இ வடமாகாண சபை உறுப்பினர்களான ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடக இணைப்பாளர் சி.பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டபோதும் தமிழரசுக்கட்சியிலிருந்து எந்த உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More