செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைதுஅளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைது

அளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைதுஅளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைது

1 minutes read

கனடா நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பயணிகள் விமானத்தை இயக்க முயன்ற விமானி ஒருவர் கடைசி நிமிடத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள கல்கேரி நகரில் இருந்து மெக்சிகோ நாட்டிற்கு நேற்று முன் தினம் 100 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் ஸ்லோவோக்கியா நாட்டை சேர்ந்த மிரோஸ்லே குரோனிச் (37) என்பவர் விமானியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஓடுத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை நோக்கி விமானி நடந்து சென்றுள்ளார்.

அப்போது, வழியில் விமான நிலைய ஊழியர்களிடம் பேசிக்கொண்டு சென்றுள்ளார்.

விமானியின் நடையிலும், பேச்சிலும் தடுமாற்றம் இருப்பதை உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தகவலை பெற்ற அதிகாரிகள் உடனடியாக விமானத்தில் ஏறி விமானியை கீழே அழைத்து வந்துள்ளனர்.

பின்னர், அவரது உடலை சோதனை செய்தபோது அளவுக்கு அதிகமான மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

விமானியை கைது செயத  போலீசார் அவரை தனி அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும், மற்றொரு விமானி மூலம் அந்த பயணிகள் விமானம் மெக்சிகோ நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.