வடமாகாணத்தின் ஆளுநராக சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி. பி. எம். எஸ். சாள்ஸ் இன்று நண்பகல் காலை ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பார். சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி பி. எம்.எஸ். சாள்ஸ். இறுதியாக சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்ததார்.

இதற்கு முன்னர் அவர் சுங்கத் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகமாக  கடமையாற்றினார். அத்துடன் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்க்கொண்டதைடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இறுதிவரை வடமாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல இழுபறிகள் இடம்பெற்றுவந்த நிலையில், இறுதியில் சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி. பி. எம். எஸ். சாள்ஸ் இன்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.