உலகிலேயே முதன் முறையாக பலூன் வழி இணையதள சேவை.

உலகிலேயே முதன் முறையாக வணிகரீதியிலான பலூன் வழி இணையதள சேவை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் தொடங்கப்பட்டு உள்ளது.

பாரிங்கோவில் பள்ளத்தாக்குகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பலூன்கள் மூலம் அதிவிரைவு 4ஜி இணையதள சேவையை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூன் மற்றும் கென்யா தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளன.

சிலிகான் வேலியில் உள்ள மையத்தில் இருந்து கணினிபொறி கட்டுப்பாட்டில் ஹீலியம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தி பலூன்கள் திசை திருப்பப்படுகின்றன.

மனித தலையீடு இல்லாமல் விமான பாதைகளில் செல்வதற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு சூறாவளிக்குப் பிறகு புவேர்ட்டோ ரிக்கோவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இணையதளம் வழியே இணைக்க பலூன்களை யு.எஸ். டெல்காம் ஆபரேட்டர்கள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்