சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஜூலை 20 முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக சீனா திரைப்பட நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்து முகமூடி அணிதல், உடல் வெப்பநிலை அளவீடு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் 30 சதவீதத்துக்கும் குறைவான பார்வையாளர்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர்.