தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பிரதமர் Prayuth Chan-ocha வின் உருவப்படங்களை எரித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

முன்னாள் ராணுவத் தலைவரான ஆன Prayuth Chan-ocha, ஆட்சியை கைப்பற்றி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக, சட்டத்தில் செய்த திருத்தங்களை அகற்றி விட்டு, முறையாக தேர்தல் நடத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 60 நாட்களுக்கு மேலாக தாய்லாந்தில் புதிதாக கொரோனா தொற்று பரவாததால், பல இடங்களில் ஒன்றுகூடும் இளைஞர்கள், பிரதமருக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆசிரியர்