Friday, September 17, 2021

இதையும் படிங்க

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும்...

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

ஆசிரியர்

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்... சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார்.

இது அவருக்கு சாதாரணமாகக் கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

நட்சத்திர அந்தஸ்து

புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன. படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

சூர்யா

வியக்கவைக்கும் மெனக்கெடல்

தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார்.

அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

சூர்யா

இயக்குனர்களின் நடிகர்

24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார்.

கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் ‘சூரரைப் போற்று’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

சூர்யா

மல்ட்டிஸ்டாரர் நடிகர்

சூர்யாவின் முதல் படமான ‘நேருக்கு நேர்’ இரட்டை நாயகர்கள் படம். அதில் விஜய்யும் நடித்திருந்தார். அதற்கடுத்து விஜயகாந்துடன் ‘பெரியண்ணா’ மீண்டும் விஜய்யுடன் ‘ப்ரண்ட்ஸ்’, விக்ரமுடன் ‘பிதாமகன், மோகன்லால், ஆர்யாவுடன் ‘காப்பான்’ என தமிழில் அதிக மல்டிஸ்டாரர் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் சூர்யாதான். அதேபோல் ‘குசேலன்’, ‘அவன் இவன்’, ‘மன்மதன் அம்பு’, ‘கோ’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என மற்ற நடிகர்களின் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களிலும் சூர்யா நடித்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

திரைப்பட நட்சத்திரங்கள் திரையைத் தாண்டி அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற விதியை உடைத்தவர் சூர்யா. அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், கலை விழாக்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடிஸ்வரன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலமாகவும் வீடுகளிலும் மக்களின் உள்ளங்களிலும் நுழைந்தார்.

சூர்யா

தரமான தயாரிப்பாளர்

2015-ல் 2டி என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. தன் மனைவியான ஜோதிகாவை கதையின் நாயகியாக்கி ’36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் மூலம் ஜோதிகா என்னும் திறமை வாய்ந்த நடிகையின் மறு அறிமுகமும் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்ஸும் சாத்தியமானது. இதைத் தவிர ‘பசங்க 2′, ’24’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ‘உறியடி 2’ என பல வகையான தரமான படங்களைத் தயாரித்திருக்கிறார். ‘கடுகு’, ‘சில்லுக் கருப்பட்டி’ போன்ற தரமான சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். 

சமூகநலப் பணிகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006-ல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்து அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல் ஆளாக சூர்யாதான் குரல் கொடுத்தார்.இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், சமூக அக்கறை கொண்டவர் என பல முகங்கள் கொண்டு தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் சூர்யா, இன்னும் பல சாதனைகள் படைத்து நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

இதையும் படிங்க

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான...

விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

மேலும் பதிவுகள்

இசைப்பேரரசி பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் 105 ஆவது ஜனன தினம் இன்று

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே இவர் பெயரின் விரிவாக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் ஓர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ,"பாரத...

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடு!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு  தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு ஆலோசனை வழங்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

மீம்ஸ்களின் மன்னன் வடிவேலுவிற்கு இன்று பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் வருகின்றனர்.

ஊரடங்கு நீடிக்கும் என தான் கருதவில்லை! – அமைச்சர் வெளியிட்ட தகவல்

21ம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தான் கருதவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் – நேரில் வந்து வாழ்த்திய சசிகலா

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அ.ம.மு.க....

விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி கோழைகளைப் போன்று ஒளிந்திருந்தவரே லொஹான் – சரத் பொன்சேகா

சண்டியர்கள் சிறைக்குள் வந்தால் அவர்களின் எலும்பை முறிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு