செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வங்கி விடுமுறை பற்றி அச்சம் வேண்டாம்! – அகிலவிராஜ் தெரிவிப்பு

வங்கி விடுமுறை பற்றி அச்சம் வேண்டாம்! – அகிலவிராஜ் தெரிவிப்பு

0 minutes read

மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கைவைக்க முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3 வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி விடுமுறை வழங்குவது தொடர்பில் நாட்டில் தேவையற்ற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவாகக் கூறியுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அஸ்வெசும போன்ற திட்டங்களை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் உள்ளடக்கக் கூடாது. அனைத்தும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.