December 7, 2023 8:40 pm

செப்டம்பர் 7ல் இந்தியா வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்கவுள்ளார்.

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் திககளில் நடக்கிறது. ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் திகதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள்.

சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்