Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மழை குறுக்கிட வாய்ப்பு.

மழை குறுக்கிட வாய்ப்பு.

1 minutes read

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதல் லீக் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.

குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும், 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோல்வி கண்டது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ஷாசத் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி ஹாட்ரிக் வெற்றிபெற முனைப்பு காட்டும் என்பதாலும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க போராடும் என்பதாலும் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டான்டனில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் பிற்பகலில் மழை பெய்ய 40 சதவீத வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆட்டம் நடைபெறும் போது 15 டிகிரி வெப்பமே இருக்கும் என்பதால் மழை குறுக்கிட அதிக வாய்பபுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் இதுவரை ஒரே ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியே வெற்றிபெற்றது.

நன்றி – Vijay R | news18

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More