ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பிக்கபட்டது.

கிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், அவை கொவிட்-19 வைரஸ் தொற்றின் ஆபத்து உள்ள காரணத்தினால் இரசிகர்கள் இன்றிய அரங்குகளிலேயே நடைபெறுகின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியொன்றினை பார்வையிட இரசிகர்கள் சுமார் 1,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த கண்காட்சிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றிருந்ததோடு, இரண்டு நாட்கள் கொண்ட இந்தப்போட்டி இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகளான சர்ரேய் மற்றும் மிடில்செக்ஸ் இடையிலான நட்பு மோதலாகவும் அமைந்தது. உலகில் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் இரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்ற முதல் கிரிக்கெட் போட்டியாகவும் சர்ரேய், மிடில்செக்ஸ் அணிகள் இடையிலான இந்த மோதல் மாறியிருக்கின்றது.

இப்போட்டியின் ஏற்பட்டாளர்களில் ஒருவரான சர்ரேய் கிரிக்கெட் கழகத்தின் சிரேஷ்ட நிர்வாகியான றிச்சார்ட் குட் கருத்து வெளியிட்ட போது “இப்போட்டியினைப் பார்வையிட 1,000 இரசிகர்கள் வரையில் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியதனை அடுத்து 10,000 பேர் வரையில் போட்டியினைப் பார்வையிட விருப்பம் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இப்போட்டிக்கான இரசிகர்கள் ஓவல் மைதானத்தின் இரு வெவ்வேறு கதிரைத் தொகுதிகளில் அமரவைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு இடையில் இரு கதிரைகள் கொண்ட சமூக இடைவெளி பேணப்பட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.மறுமுனையில் மேலும் பேசியிருந்த றிச்சார்ட் குட், இது மாதிரியான இரசிகர்கள் உடனான கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் பருவகாலத்திலும் ஏற்பாடு செய்ய திட்டங்கள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியர்