பார்சிலோனா அணியில் சீசன் முடியும் வரை இருக்க போவதாக மெஸ்ஸி அறிவிப்பு!

புகழ் பூத்த கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, 2020-2021 சீசன் முடியும் வரை பார்சிலோனா அணிக்காக விளையாடப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

33 வயதான அர்ஜென்டினா கால்பந்து வீரர் இதன் மூலம் தனது தேசிய அணியின் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

எனினும், தனது ஒப்பந்தத்தைப் பற்றி கழகத்துடன் நீதிமன்றப் போரில் ஈடுபட விரும்பவில்லை என்பதால் மட்டுமே இந்த முடிவினை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர் அழுத்தங்களால் அதிருப்தியடைந்த மெஸ்ஸி அணியிலிருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார்.

ஆனால், மெஸ்ஸியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் இடமாற்றம் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான இடமாற்றம் தொகையாக 700 மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என பார்சிலோனா நிர்ணயித்தது.

ஆசிரியர்