May 28, 2023 5:35 pm

இந்தியா , நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி : 6 ஆம் நாள் ஆட்டம் இன்று!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மேலதிக நாளாக இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆறாவது நாளாக இன்று (புதன்கிழமை) போட்டி தொடரும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முதலாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டமையினால் சர்வதேச கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி ஐந்தாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில், 2 விக்கட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 249 ஓட்டங்களையும் இந்திய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இதன்படி, 32 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி இன்று தொடர்ந்தும் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்