மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா

‘ஹியூமன் லின்ங்’ மாற்றுத்திறனாளிகளுக்கான வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா மருதமுனை ஹியூமன் லின்ங் வளாக மைதானத்தில் நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எல். அஜமல் கான் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (19) நடைபெற்றது. 

இந்த இல்ல விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளருமான திருமதி. சரண்யா சுதர்சன் கலந்து கொண்டார். 

இல்ல விளையாட்டு விழாவில் ரோஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

ஆசிரியர்