Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்றவரின் முதலாவது ஐபிஎல் சதம்

கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்றவரின் முதலாவது ஐபிஎல் சதம்

1 minutes read

கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023 ஐபிஎல் தொடரில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளதை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணிக்காக 21 வயது  ஜெய்ஸ்வால்  62 பந்துகளில் 124 ஓட்டங்களை பெற்றார்.

ஜெய்ஸ்வால் தான் பிறந்த உத்தரபிரதேசத்திலிருந்து வெளியேறி மும்பாயில் குடியேறியவர் – அந்த மும்பாயில் அவர் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பெற்றுள்ளார்.

11 வயதில் ஜெய்ஸ்வால் தனது குடும்பத்தவர்களுடன் மும்பாய்க்கு குடிபெயர்ந்தார்.

நான்மாட்டுபண்ணையில் உறங்குவேன் பின்னர் உறவினர் வீட்டில் தங்கினேன் அவர் என்னை வேறு இடம்பார்க்கசொன்னார் 2020 இல் ஜெய்ஸ்வால் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார்.

மும்பாய் மைதானத்தில் நான் கூடாரமொன்றில் தங்கியிருந்தேன்,பகலில் நான் விளையாடுவேன் உணவிற்கு பணம் சேர்ப்பதற்காக  நான் இரவில் பானிப்பூரி விற்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கழகங்களின் கிரிக்கெட் ஓட்டங்களை பதிவது பந்தை எடுத்துகொடுப்பது போன்றவற்றை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கழகத்திற்கானகட்டணத்தை செலுத்தினேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது முதல் சதத்திற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன எவ்வாறான சிறந்த கதை எவ்வாறான சிறந்த திறமை ஜெய்ஸ்வால் ஒரு எதிர்கால சூப்பர்ஸ்டார் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டொம்மூடி தெரிவித்துள்ளார்.

அவரிடம் மிகச்சிறந்த திறமையுள்ளது உள்ளுர் போட்டிகளில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார் அந்த திறமையை ஐபிஎல்லில் தொடர்கின்றார் என இது இந்திய அணிக்கும் ராஜஸ்தான் ரோயலிற்கும் சிறந்த விடயம் என ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More