தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் மலேசியாவின் ஜே.எச். லியோங்-ஐ எதிர்கொண்டார். இதில் இந்திய வீரர் லக்சயா சென் சிறப்பாக விளையாடி மலேசிய வீரரை வீழ்த்தினார்.
முதல் செட்டை 21-19 எனவும், 2-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி நேர்செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு வீரர் கிரண் ஜார்ஜ் 16-21, 17-21 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.