செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

1 minutes read

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

தீவுகள் ஆராயுங்கள்

போட்டியின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க 153 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.

ஆட்ட நேர முடிவில் தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களுடனும் பசிந்து சூரியபண்டார 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

லஹிரு உதார 7 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் ஓட்டம் பெறாமலும் கமிந்து மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

பந்துவிச்சில் சக்கிப் கான், ராஸாஉல்லா, ஆமிர் ஜமால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 121 ஒட்டங்களிலிருந்த தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் காஸி கோறி 54 ஓட்டங்களையும் அஸான் அவாய்ஸ் 47 ஓட்டங்களையும் தய்யப் ஆரிவ் 46 ஓட்டங்களையும் ராஸாஉல்லா 42 ஓட்டங்களையும் சக்கிப் கான் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.