Saturday, January 16, 2021

இதையும் படிங்க

ஓராண்டு கால ஆட்சி ஒரு மதிப்பீடு | நிலாந்தன்

“ஜனாதிபதியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளை சில அமைச்சர்கள் அரைவாசி அளவுக்குக்கூட நிறைவேற்ற தவறியிருக்கிறார்கள். இந்த நிலைமை...

யாழ்ப்பாணத்தில் இஞ்சி உற்பத்தி!

நாம் வாழும் உலகில் மனிதன் முயற்சியினால் மட்டுமே உயர்கின்றான் என்பது நிதர்சனமே. மானுட உயிர்களை மட்டுமல்ல,தன்னை நம்பி வாழும் பல உயிர்களையும் வாழவைக்கும் கடவுளாக விவசாயி விளங்குகின்றான்.

அன்று மொழியோடு போர் இன்று நினைவுகளோடு போர் | தீபச்செல்வன்

1974ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் மொழியோடு படுகொலைப் போர் புரிந்த அரசு, இன்று இனத்தின் நினைவுகளோடு போர் செய்கிறது.

போலியோ போன்று கொரோனாவும் ஒழிக்கப்படுமென இந்தியா சபதம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.3 கோடி பேருக்கு கொரோனா...

இலங்கையில் தொற்றா நோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. தொற்றா நோய்கள் மனித வரலாற்றில் முன்னொரு போதுமே இவ்வாறு அதிகரித்திருக்கவில்லை. அதுவும் நவீன அறிவியலில் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்...

கூட்டமைப்பிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததென்ன?

13 ஐ முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்  மாகாண சபை முறைமை நீக்கப்படக் கூடாது  வட,கிழக்கு...

ஆசிரியர்

அம்பாறை மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழ் மொழிப் பிரிவுக்கான கலாசார விழாக்கள்!

மனிதனது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலைகளைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலவல்கள் அமைச்சின் கீழியங்கும் கலாசார அலுவல்கள் திணைக்களம் காத்திரமான பங்களிப்பு நல்கி வருகின்றது. தற்பொழுது நிலவும் கொவிட்19 தொற்று பரவல் நிலைக்கு மத்தியிலும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட தமிழ்மொழிப் பிரிவுக்கான கலாசார விழாக்கள் நடைபெற்றமை வரலாற்றுப் பதிவாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், காரைதீவு, கல்முனை (தமிழ் பிரிவு), நாவிதன்வெளி, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, பொத்துவில், இறக்காமம் ஆகிய 13 தமிழ்மொழி கலாசாரப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ்விழாக்கள் நடாத்தப்பட்டதாக அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்காவின் ஆலோசனை, வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விழாக்களில், அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர்கள் ஏ.எம்.அப்துல் லத்தீப், வீ.ஜெகதீஸன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

விழாக்களில், பிரதேச கலை இலக்கியவாதிகள் பரிசு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், தமிழ்மொழி மூல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு திறமை காட்டிய மாணவர்கள் பரிசு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு முதலாமிடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய ‘இலக்கியம்’ விஷேட மலரும் இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

“கலாசார விழாவையொட்டி. பாடசாலை மட்டத்தில் பிரதி வருடமும் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கமாகும். ஆனால், இம்முறை கொவிட்19 வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் இயங்காது, மூடப்பட்டிருந்ததால் அதிகமான மாணவர்கள் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. இந்நிலை எதிர்காலத்தில் தொடரக் கூடாது என்பதே எமது எண்ணமும், எதிர்பார்ப்புமாகும்” என்று மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிதியுதவிக்கான காசோலைக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. உதவி தேவையாகவுள்ள கலைஞர்களுக்கு பணக் கொடுப்பனவு வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மொத்தம் 13 தமிழ்மொழி பேசும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்களிடமிருந்து ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்நிதியுதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் கீழ் 31 கலை, இலக்கிய மன்றங்கள் நிதியுதவிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டன. கலை, இலக்கிய மன்றங்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ரூபா 10 ஆயிரம், ரூபா 06 ஆயிரம், ரூபா 04,500 என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தும் நடைமுறை கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், கலை இலக்கிய மன்றங்களின்; செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் சுமார் 15க்கும் மேற்பட்ட அரச விழாக்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரச தொலைக்காட்சி விருது விழா, அரச புகைப்பட விருது விழா, அரச சிறுவர் நாடக விழா, அரச சிறுவர் நாடக பிரதியாக்கப் போட்டி, அரச சிறுவர் ஓவிய விழா, அரச சிறுவர் ஓவிய மற்றும் சிற்ப விழா, தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டி, ‘கலாபூஷண’ விருது விழா, பிரதேச மற்றும் மாவட்ட இலக்கியப் போட்டிகள் என போட்டிகளின் பட்டியலில் பல அம்சங்கள் உள்ளன. பகிரங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு இப்போட்டிகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது!

கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...

வாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி!

வாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...

இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்!

இன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது....

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைக்கிறார். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை...

இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்!

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவை நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகள் நீரில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி...

மேலும் பதிவுகள்

உலகளாவிய சூரிய வழிபாடு!

கதிரவன் என்ற ஒளிப் பிழம்பை ஆதிகாலம் தொட்டு மக்கள் அச்சத்தோடும் ஆனந்தத்தோடும் வணங்கி வந்தனர். ஞாயிறு வழிபாடு அன்று தொட்டு இன்றுவரை நடத்தப்பெறுவதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று இருளைக் கண்டு...

பலத்த காற்றுடன் கூடிய மழை- இரணைமடு குளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளது!

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதல் இரணைமடுகுளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை...

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய்...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது!

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு அவர் கண்டனமும்...

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்!

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார்.

அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி: “நாடு முழுவதும், முதல் கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிக்காகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். அடுத்த சில மாதத்தில் 30 கோடி...

பிந்திய செய்திகள்

முகக்கவசத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!

கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்திக் கழுவுதல் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்திக் கழுவுதல் ஆகியவற்றுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் முகக்கவசம் அணிவதன்...

12 நாடுகளுக்கு பயணத் தடை | சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

துயர் பகிர்வு