Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

7 minutes read

ஆயுத நிறுவனங்களின் இலாபங்களுக்காக மக்கள் அழிவா?
ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு?

——————————————————
ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டு ஆயுத நிறுவனங்களின் பங்குசந்தை வர்த்தகமும் அதீதமாக உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. லாக்ஹீட் மார்ட்டின் பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவிகிதமும், நார்த்ராப் க்ரம்மன் பங்குகள் சுமார் 12 சதவிகிதமும் அதிகரித்துள்ளன)

காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கடுமையாக தரைவழியாக தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தற்போது வரை இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 10,000க்கும் மேலாக நெருங்கியுள்ளது. இவ்வளவு ஆபத்தை ஏற்பத்தும் போரினால் யாருக்கு லாபம்? யார் பயனடைகிறார்கள்? எனும் கேள்வி சாதாரண மக்கள் மனதில் எழுந்திரும்.

ஆயுத வர்த்தகத்தில் அமெரிக்கா:
சர்வதேச ஆயுத விற்பனையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக ஆராய்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சீனா தனது ஆயுத விற்பனையை கடந்த காலத்தைக் காட்டிலும் அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போதய ஆயுத வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு 54 சதவீதமாகும். சீனா 13 சதவீத பங்களிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 7.1 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் முறையே4-வது மற்றும் 5-ம் இடத்திலும் உள்ளன. சீன நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தக அளவு 6,680 கோடி டாலராகும்.
ஆயுத வர்த்தகத்தில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பொருட் சேதங்களுக்குப் பின்னரும், தற்பொழுது அதிகளவில் பாவிக்கப்படும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் எந்தவொரு பரந்த, பொது நோக்குடன் சர்வதேச சட்டமும் உருவாக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இதே வேலை உலகலாவிய ரீதியில் ஆயுதங்கள் ஒரு முக்கிய பாதுகாப்பு பங்காக இருப்பதைக் காண்பதுடன் அதிகளவிலான கொலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு சமூகமாக சமூகத்தில் திகழ்கின்றது.
போரின் அழிவுகள்:
போர்களுக்கு அடிப்படை என்பது ஆயுதங்கள்தான். இந்த ஆயுதங்களை எல்லோராலும் உற்பத்தி செய்துவிட முடியாது. சில குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் இதை உருவாக்க முடியும். அப்படியான நிறுவனங்கள்தான் லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ராப் க்ரம்மன். இவை இரண்டும் அமெரிக்காவை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களாகும்.
ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குசந்தை வர்த்தகமும் உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
லாக்ஹீட் மார்ட்டின் பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவிகிதமும், நார்த்ராப் க்ரம்மன் பங்குகள் சுமார் 12 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.
உள்நாட்டு பாதுகாப்பு (ஹோம்லேண்ட் செக்யூரிட்டி நியூஸ் வயரின் ) அறிக்கையின்படி, கடந்த 2009ம் ஆண்டு முதல், சுமார் 169 நாடுகளுக்கு 444 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவில் ஆயுத விற்பனையை அமெரிக்கா செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இதில் லாக்ஹீட் மார்ட்டின் மட்டும் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை கொண்டிருக்கிறது.
இந்நிறுவனம் ஆயுதங்களை தவிர F-35 போர் விமானங்கள், சிகோர்ஸ்கி மற்றும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. எல்லா போர்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
கொடிகட்டி பறக்கும் ஆயுத உற்பத்தி:
தற்போது நார்த்ரோப் க்ரம்மன் 70 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மூலதனத்தை கொண்டிருக்கிறது. தற்போதைக்கு ஆயுத உற்பத்தி சந்தையில் இந்த இரண்டு நிறுவனங்கள்தான் கொடிகட்டி பறக்கின்றன. தைவான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களுக்கு இந்த ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்றைய நிலையில் ஆயுத விற்பனையும் இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் காலநிலை மாற்றம் உச்சமடைந்தது போல பூமியின் தென் துருவத்தில் உள்ள பனி வேகமாக அழிந்துவிடும்.
எனவே ஆயுத விற்பனை நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் மொத்த ஆயுத விற்பனையில் வல்லரசு நாடான அமெரிக்க நிறுவனங்களின் பங்கு மட்டும் 51%ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தை யூதர் ஆக்கிரமிப்பு:
ஜெர்மனிய நாஷி தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது.
கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.  ஆனால் இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சுமார் 10000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதிக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்கும் இணைப்பை இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காசாவில் உள்ள ஆம்புலன்ஸ்களில் எரிபொருள் இல்லை. ஏற்கெனவே நடந்துக்கொண்டிருக்கும், ரஷ்யா-உக்ரைன் போர், அதனைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் ஆகியவை உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் பாரிய ஆயுத வியாபாரி அமெரிக்கா:
உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா உள்ளது. ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனம் (SIPRI- Stockhom International Peace Reserch Institute) 2020இல் வெளியிட்ட புள்ளி விவரத்தில், உலகளவில் நடைபெற்றுவரும் ஆயுத விற்பனை குறித்தான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
2019-ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள ஸ்டாக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கணக்குப்படி, அதிகரித்துவரும் சர்வதேச ஆயுத விற்பனையில் முதல் 25 இடங்களுக்குள் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 25 இடங்களுள் பட்டியலிடப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் சுமார் 60% அளவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் அமெரிக்கவைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக முதல் 5 இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரம்மன், ரேதியோன் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆக்கிரமித்து சுமார் 166 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு 18% ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர்.ஏர்பஸ் மற்றும் தலேஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனமானது, ரஃபேல் போர் விமான ஏற்றுமதியால் 38-வது இடத்திலிருந்து 17-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த பட்டியலில் ரஷ்யாவைச் சேர்ந்த 2 ஆயுத நிறுவனங்கள் 3.9% பங்குகளுடன் இடம்பெற்றுள்ளன.
சீனா ஆயுத நிறுவனங்கள்:
பட்டியலிடப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் 15.7% ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இதில் சீனா அரசுக்கு சொந்தமான ஏ.வி.ஐ.சி, சி.இ.டி.சி மற்றும் நோரின்கோ ஆகிய ஆயுத நிறுவனங்கள் முறையே ஆறு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களை பிடித்துள்ளன.
ஆனால் அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், தற்போது சீனாவைச் சேர்ந்த  நிறுவனங்களின் விற்பனை கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளதாக ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்’ ஆயுத மற்றும் இராணுவ செலவினங்களை ஆராயும் திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் :
ஆச்சரியம் தரும் விதமாக முதன்முறையாக மத்திய கிழக்கு நாட்டின் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஆயுத உற்பத்தி நிறுவனமான எட்ஜ் (EDGE) முதல் 25 இடங்களில் சர்வதேச ஆயுத விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகள் படிப்படியாக ஆயுத வர்த்தகத்தில் நுழையத் தொடங்கி இருப்பதாகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடப்படும் தொகை பல நாடுகளில் அதிகரித்து வரும் சூழல் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ஆயுத விற்பனையில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் மேற்குலகைச் சார்ந்தவையாக இருந்தாலும், இந்நிறுவனங்கள் சவூதி அரேபியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தங்களுக்கான துணை நிறுவனங்களை அமைத்து ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகின்றது.
பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளை முடக்கி அவற்றின் உலகளாவிய சந்தையை கட்டுப்படுத்துவதன் காரணமாக, அமெரிக்க நிறுவனங்களுக்கு குறிப்பாக தெற்கு பகுதிகளில் இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் ஆயுத தேவைக்கு போட்டியில்லா சந்தையை வழங்க முடிவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சீமோன் வெஸ்மேன் தெரிவித்தார்.
இந்திய  ஆயுத நிறுவனங்கள்:
ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறு வனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய ஆர்டினன்ஸ் ஆலைகள் (ஐஓஎப்), பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஆகிய 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டிலும் இந்த 3 நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இப் பட்டியலில் எச்ஏஎல் நிறுவனம் 42-வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 297 கோடி டாலருக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது. இது 2019-ம் ஆண்டை விட 1.5 சதவீதம் அதிகமாகும். இந்திய ஆர்டினன்ஸ் தொழிற்சாலை 60-வது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் 190 கோடி டாலருக்குஆயுதங்கள் சப்ளை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.2% அதிகமாகும். பிஇஎல் 66-வது இடத்தில் உள்ளது. இது 163 கோடி டாலர் அளவுக்கு சப்ளை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4% அதிகம்.
ஆயுத உற்பத்தி நாடுகளில் மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதிசெய்யும் 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அமெரிக்காவைச் சேர்ந்த 41 நிறுவனங்கள் இடம்பெற்று மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டநாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.இவற்றின் மொத்த வர்த்தகம் 28,500 கோடி டாலராகும். முந்தைய ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகமாகும்.
ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு:
ஓர் நாட்டின் மக்களை பாதுகாப்பதும், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றை கட்டுப்படுத்துதல், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மதித்தல் போன்றவற்றிற்கு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு அரசாங்கமும் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலகிலுள்ள வல்லரசு நாடுகள் பல, ஆயுத வர்த்தக நாடுகளாக காணப்படுகின்றன. ஆதலால் இவர்களுக்கே உலகெங்கும் பரவிக்கிடக்கும் இச்சந்தையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கத்துவம் பெற்றுள்ள ஐந்து நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா இணைந்து உலகில் ஏற்றுமதி செய்யப்படும் 88 சதவீதம் பொதுவான பாவனையிலுள்ள ஆயுதங்கள் காரணமாக உள்ளன. இவ்வாறான ஆயுதங்களே அடிக்கடி நிலவும் கொடிய மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகவுள்ளது.
ஆயுத கட்டுப்பாட்டுச் சவாலை கூடிய விரைவில் எதிர்கொள்வது எல்லா அரசாங்கங்களினதும் முக்கியமான கடமையாகும். அரசாங்கங்களின் ஒத்துழைப்பு ஆயுதங்களின் பரவலையும், உற்பத்தியை கட்டுப்படுத்த உதவ வேண்டும். குறைந்த பட்சம் மேற்குறிப்பிட்ட ஐந்து வல்லரசு நாடுகளும் மனித உரிமைகளுக்கெதிராக அல்லது மனிதாபிமான ஓர் சட்டதிட்டங்களுக்கெதிராக பயன்படுத்த முனையும் பிரதேசங்களும் ஆயுத விற்பனையை தடை செய்வதில் பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.
ஆயுதங்கள் வறுமைக்கும் துன்பத்திற்கும் நேரடியாக வழி வகுக்கின்றன. நாள்தோறும் ஆயுத வன்முறைகளால் பல லட்சக்கணக்கான ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் அச்சத்திலும் கலக்கத்திலும் வாழ்கின்றனர். இதனால் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் பழியாகின்றது.
கட்டுப்பாடன்றி அதிகரித்து வரும் ஆயுதங்கள் தவறான பாவனைக்காக அரசாங்கப் படைதயினரிதனாலும், ஆயுதக் குழுக்களினாலும் உபயோகத் திற்குள்ளாகின்றது. இதனால் பெருமளவிலான உயிரிழப்பு, வருமானம் இழப்பு, வறுமையில் இருந்து மீளும் வாய்ப்புகள் குறைதல் போன்றவற்றிற்கு ஊக்கத் தொகை வருடத்திற்கு, சராசரியாக 22 மில்லியன் அமெரிக்க டாலர்களை வியாபார நடவடிக்கைகளுக்காக ஆபிரிக்க, ஆசிய, மத்திய மற்றும் ஆயுத தென் அமெரிக்க பிராந்தியங்களில் விரயமாக்கப்படுகிறது.
போரால் சிதைந்த மேற்குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் அபிவிருத்திகளான இலக்குகளான கல்வி, மற்றும் வறுமை ஒழிப்பு, மற்றும் தாய்மார் மற்று சிசு மரண வீதத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
நாள்தோறும் ஆயுத பாவனையினால் மனித உரிமைகளுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகள் மற்றும் போர், வறுமை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகில்்கட்டுப்பாடற்ற நிலையில் ஆயுதங்கள் பரவலாக அதிகரித்து வரும் சட்டவிரோத ஆயுதங்களின் பாவனை பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்.
          – ஐங்கரன்  விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More