Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இந்திய-பாகிஸ்தான் அணு ஆயுத முறுகல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இந்திய-பாகிஸ்தான் அணு ஆயுத முறுகல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மும்பையில் பறிமுதல் !

(அணு ஆயுத பலப்பரிட்சையில் இருநாடுகளிடையே நீண்ட முறுகல் நிலவுகிறது. தற்போது இதன் உச்சக்கட்டமாக, சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்திற்கான தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்ததை பாகிஸ்தான் அரசு கடுமையாக ஆட்சேபித்துள்ளது)

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவை குறி வைத்து 130 அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை செலுத்த பாகிஸ்தானிடம் வல்லமை இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அமெரிக்க உளவுஅமைப்பு தெரிவித்தது.

தென்னாசிய அணுஆயுத பலம்:

தென்னாசியாவில் அணுஆயுத போர் வந்தால் இந்தியா, பாகிஸ்தானை சமாளிப்பது கடினம் என்றும் தற்போது பாகிஸ்தானிடம் 120 முதல் 160 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். அதற்கு மேலாக இன்னும் கூட பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

ராணுவ பலம் மிகுந்த இந்தியாவை, அணு ஆயுதம் மூலமாகத்தான் கட்டுப்படுத்த முடியுமென்பது பாகிஸ்தானின் திடமான நம்பிக்கை.
அதனால்தான் அணு ஆயுதங்கள் உற்பத்தியை, பாகிஸ்தான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. அத்துடன் அணுபிளவு ஆயுதங்களை தயாரிப்பதிலும் பாகிஸ்தான் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதும் சர்வதேச நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை எப்போதுமே அரசியல் நிலையற்றத் தன்மை நிலவுவதால், அணு ஆயுத தளவாடங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழவே செய்கின்றன. இந்தியா கடந்த 2022ம்ஆண்டில் ஆறு அணு அயுதங்களை உருவாக்கியுள்ளது. தற்போது 156 அணு ஆயுதங்கள் இந்தியாவிடம் உள்ளன. பாகிஸ்தான் இதே ஆண்டில் ஐந்து அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் தற்போது 165 அணு ஆயுதங்கள் உள்ளன.

அணு ஆயுத பலப்பரிட்சையில் இருநாடுகளிடையே நீண்ட முறுகல் நிலவுகிறது. தற்போது இதன் உச்சக்கட்டமாக, சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்திற்கான தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்ததை பாகிஸ்தான் அரசு கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

கராச்சிக்கு செல்ல, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களில் தொடர்புடைய இரட்டை பயன்பாட்டு சாதனங்களுடன் சீனாவில் இருந்து வந்த கப்பல் இந்திய அரசால் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்திபட்டுள்ளமை பாரிய முறுகலை தோற்றுவித்துள்ளது.

சீனாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற கப்பல் :

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தும் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் சரக்கு கப்பலில் அனுப்பப்பட்டிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன்
அடிப்படையில் இக்கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ பயன்பாட்டு பொருட்கள் அனுப்பப்பட்ட சரக்குகளை இந்திய துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன.

மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய சுங்க அதிகாரிகள் மால்டா நாட்டு கொடியுடன் கடந்த மாதம் 23ம் திகதி வந்த கப்பலை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், இத்தாலி நிறுவனத்தின் தயாரிப்பான கம்ப்யூட்டர் நியூமரிகல் கன்ட்ரோல் மெஷின் (சிஎன்சி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த கருவியை வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம்.

பாகிஸ்தானில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களுக்காக இந்த உபகரணங்கள் சீன நிறுவனத்தில் இருந்து கராச்சிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். சிஎன்சி கருவிகள், சர்வதேச ஆயுத கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வருபவை. எனவே, 22,180 கிலோ எடையுள்ள இந்த உபகரணங்களை இந்திய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுத சாதனங்கள்:

ஐரோப்பிய நாடான மால்டாவை சேர்ந்தசரக்கு கப்பல் சீனாவின் ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு புறப்பட்டது. இந்த சரக்கு கப்பல் கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்தியாவின் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலில் உள்ள தளவாடங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது சந்தேகம் எழுந்தது. உடனடியாக பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) சேர்ந்தநிபுணர்கள் மும்பை துறைமுகத்துக்கு வந்து சந்தேகத்துக்குரிய தளவாடங்களை ஆய்வு செய்தனர்.

இக் கப்பலில் தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின்மூலம் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்ட முடியும். சம்பந்தப்பட்ட தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மால்டாவை சேர்ந்த சரக்கு கப்பல் மட்டும் விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல்களின்படி, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அந்த நாட்டுக்கு தேவையான அணு ஆயுததளவாடங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சார்பில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தளவாடங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூனில் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. ஆனால் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் என்ற பெயரில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது.

தற்போது சீனாவை சேர்ந்த ஷாங்காய் ஜேஎக்ஸ்இ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் விங்ஸ்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தளவாடங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனா அனுப்பிய தளவாடங்கள் மூலம் அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தயாரிக்க முடியும்.

சர்வதேச சட்ட விதிமீறல்:

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் சீனாவின் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட ஏவுகணை தயாரிப்புக்கு தேவையான தளவாடங்கள் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தளவாடங்களை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பி வைத்திருக்கிறது. இதே வகை அணுஆயுத தளவாடங்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. அந்த நாட்டுக்கும் சீனாவே மறைமுகமாக உதவி செய்து வருகிறது.
அணு ஆயுத தளவாடங்களை சரக்கு கப்பலில் அனுப்பியது சர்வதேச சட்ட விதிமீறல் ஆகும். இவற்றையே மும்பை சுங்கத் துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இருநாடுகளிடையே நீண்டகாலமாக போர் முறுகல் நிலவுகிறது. தற்போது இதன் உச்சக்கட்டமாக அணு ஆயுத பலப்பரிட்சையில் இருநாடுகளும் இறங்கியுள்ளன. சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்திற்கான தளவாடங்கள்
மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்ததை பாகிஸ்தான் அரசு கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More