மரணம் உண்மையானது, அது மட்டுமே நிச்சயமானது (மரணம் சாஸ்வதம்) எனும் வார்த்தைகள் எமது சமூகத்தின் வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நாட்களில் உச்சரிக்கப்பட்டவையே. அதன் பின்னர் மரணமே வாழ்க்கையாகிப் போனபோது அம்மரணங்களில் விடுதலைக்கான அர்த்தங்கள் பொதிந்திருந்தன……
எமது மயானங்கள் எப்போதாவது எரிந்த காலங்களைத் தாண்டி எப்போதுமே எரியும் காலங்களில் வாழ்ந்தோம் நாம். பின்னர் மரணம் மீதான பயம் அற்று, வாழ்வதற்கான அர்த்தங்களைத் தேடி நாம் வாழ்ந்த காலங்கள் மலர்ந்த பொழுதில், வாழ்வதற்கான ஆசைகளுடன் வாழ முயற்சித்த போது இனந்தெரியாத நபர்களால் பிடுங்கி எறியப்பட்ட இளைஞன் ஒருவனின் கொலை…..
அக் கொலைக்கான சந்தேக நபர்களுள் ஒருவராக உள்ளடக்கப்பட்ட அவ் இளைஞனின் இளம் மனைவி, கொல்லப்பட்டவன் மனைவிக்காக இலண்டனில் இருந்து இலங்கைக்குத் திரும்பி வந்தவன்…..
அவள் அவனை மணம் புரிந்த பின் இலண்டனுக்குப் பயணப்பட்டவள்……
கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட அவ்விளைஞனின் கொலையின் பின் பொதிந்து கிடக்கும் அல்லது பொதிந்து கிடப்பதாகக் கருதப்படும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஒரு கொலையின் கதை…..
இலங்கையில் குறிப்பாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவிய விறு விறுப்புத் தொடர் ……..
இலங்கையில் இருந்து எழுத்தாளர் மாயன் எழுதும் “ஒரு கொலையின் கதை” வணக்கம்LONDON ல் விரைவில் ஆரம்பமாகவுள்ளது….