Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை நீள் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தது உண்மைதானா …இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா ?நீள் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தது உண்மைதானா …இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா ?

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தது உண்மைதானா …இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா ?நீள் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தது உண்மைதானா …இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா ?

3 minutes read

Untitled-114-350x250

இந்தக் கட்டுரை அமெரிக்கா உண்மையிலேயே நிலவிற்கு மனிதனை அனுப்பியதா??அல்லது உலகை ஏமாற்ற உருவாக்கிய கட்டுக் கதையா என்பதை முழுக்க முழுக்க விளக்கும் பதிவு..உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள்

உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 – ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன்,

1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் ”லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ”லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது.

அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர்.

அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ”அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது.

அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் ”அப்போலோ – 11” என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ”நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ”நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

”ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்” என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய ”science fiction” பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் – இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2 ) நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3 ) அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4 ) சுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5 ) நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்…?

இப்படியாக அந்த படபிடிப்பில் கோட்டைவிட்டிருப்பதால் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவில்லை என்றும், நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ள இந்த காலத்திலேயே அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு நிலாவைப் பற்றிய எந்தவிதமான முழுமையான முடிவுக்கும் வரமுடியாமலும், நிலாவிற்கு ஆட்களை அனுப்ப யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்றைக்கு – அதுவும் 60 – களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.

இனிமேல் உங்களிடம் யாராவது நீள் ஆம்ஸ்ட்ராங்கை அமெரிக்க நிலவுக்கு அனுப்பியது உண்மை என்றால் அதற்க்கு முன்பே நாங்கள் ஒரு பாட்டியை வடை சட்டியோடு நிலவுக்கு அனுப்பி விட்டோம்.கடந்த 60 வருடத்திற்கு மேல் அந்த பாட்டி நிலாவில் வடை சுட்டு வியாபாரம் செய்து வருகிறது.அவரை உங்கள் ஆம்ஸ்ட்ராங் பார்த்தாரா என்று விசாரியுங்கள்.

 

 

நன்றி : ஈழ மண் வாசம் | கரை செல்வன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More