Sunday, November 29, 2020

இதையும் படிங்க

கொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல!

1994ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய நாவலின் தலைப்பிலேயே, அந்த...

தன் முனைப்பற் றமனிதநேயவாதி பிரேம்ஜி ஞானசுந்தரன் | முருகபூபதி

தன்முனைப்பற்றமனிதநேயவாதியின்மறைகரத்தால்மலர்ந்தபணிகள் ! நவம்பர் 17ஆம்திகதிபிறந்ததினம் முருகபூபதி – அவுஸ்திரேலியா

வீடு, நில உடைமைகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலப்பகுதியா?

கொழும்பு மத்தியில் வீடு, நில உடைமைகளை கொள்வனவு செய்வது என்பது பெரும்பாலான இலங்கையர்களுக்கு சில காலமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக அமைந்துள்ளது. ஆனாலும், என்றாவது...

ஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை தெரியுமா? | ஆசி கந்தராஜா

பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள்.

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடிப்பை பாருங்கள்! அசந்து போவீர்கள்

நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சுரேஸ் சக்கரவர்த்தி. யார் இந்த சுரேஸ், இவரது சாதனை என்னஃ என பலரும் கேட்டு...

ஆசிரியர்

இன அழிப்பின் உபாயமே காணாமல் போகச் செய்யப்படுதல் | கவிஞர் தீபச்செல்வன்

samakaalam 1 1

போர் முடிந்து விட்டது தானே, அத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது என்ற தொனியில் இலங்கை அரசும் அதற்குச் சார்பான சில நாடுகளும் பேசுகின்றன. போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குதலே பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கான மருந்து. உண்மையில் போருக்கு கொடூரமான நிறையப் பக்கங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் காணாமல் ஆக்கப்படுதல். நம் வாழ்வில் கைதவறி சில பொருட்களை தொலைத்து விட்டு வாழ்வு முழுதும் அதை பற்றி கவலை கொள்ளுவதுண்டு. மகத்தான மனித உயிர்களை தொலைத்துவிட்டு கவலைப்படுகின்ற வாழ்வு என்பது இன்னும் தொடருகிற போர்தான்.

ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம். உண்மையில் இதுபோன்ற ஒரு தினத்தை கொண்டாட இந்த உலகம் வெட்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மனித உரிமைக்கும் எதிரான அநீதிகளின் அதிகரிப்புதான் இந்த நாளை கொண்டாடுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இந்த நாளை கொண்டாடுகின்ற இனமான நாம் ஆகிவிட்டதை எண்ணி மிகவும் துயருர வேண்டி இருக்கின்றது. ஈழத் தெருக்கள் என்பது உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைகின்ற அன்னையர் நிலம்தான்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. காலத்துயரம் நிரம்பிய அக் கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை உலுப்புகின்ற செயல். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடாத்தியே வருகின்றனர். உலகிலேயே இவ் அவலம் அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.

உலக அளவில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பாக சர்வதேச புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இலங்கை அரசு நடாத்திய இன அழிப்பு போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே உலகில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு இலங்கை என்ற பெருமையும் உண்டு.

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு உபாயமாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலகில் ஜனநாயக ரீதியில் உரிமைகளை கோருகிறவர்களை காணாமல் ஆக்குவது என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற கருத்து உண்டு. உண்மையில் அதை கனகச்சிதாக இலங்கைக்குப் பொருந்துகின்றது. உரிமை கோரி போராடிய ஈழத் தமிழ் மக்களை காணாமல் ஆக்குவதை ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசாங்கம் காணாமல் போதலை ஒரு கருவியாக கையாள்கின்றது. குறிப்பாக இராணுவத்தின் வசம் போரில் வீழ்ந்த தமிழர் பகுதிகளில் காணாமல் ஆக்கப்படுதலின் வாயிலாக இளைஞர்கள், யுவதிகள் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்படும் அவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சில கொலைகள் அப்படி அம்பலமாகியுமுள்ளன.

சிங்கள இராணுவத்தின் வசமிருந்த யாழ்ப்பாணம் போன்ற அரச காட்டுப்பாட்டு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஏன் வீடுகளுக்குள் நுழைந்தும் இரண்டு மூன்று சகோதரர்களாக கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் சரணடைந்தவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களும்கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குப் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம், இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றது. அவர்கள் உயிருடன் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல வேண்டியது அவ் அரசின் வகை கூறலும் பொறுப்புமாகும். இதிலிருந்து ஒருபோதும் இலங்கை அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் உணர்வுபூர்வமான சிக்கலான விடயமாகும்.

காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் கொடூரமான இன ஒடுக்குமுறையை இனவழிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. அது மாத்திரமல்ல, இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை தனது சொந்தப் பிரஜைகளாக கருதவில்லை. இன்னொரு நாட்டின் அடிமைகளாக கருதியதினாலேயே இவ்வாறு காணாமல் ஆக்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தமது தாயகத்தை கோரினால் காணாமல் ஆக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான அச்சுறுத்தலையே இதன்மூலம் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கின்றது.

காணாமல் போனோருக்கு அரச அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதை தமிழ் மகக்ள ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் சர்வதேச தலையீடுதான் நீதியைப் பெற்றுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உண்மையில் இந்த விடயத்தை அரசியல் முதலீடாக கருதாமல் உணர்வுபூர்வமான விடயமாக கருதி, விளைவுகளை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தலைமைகள் ஈடுபட வேண்டும். இதனை ஆதாரபூர்வமான விடயங்களுடன் சர்வதேச ரீதியாக வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே நீதிக்கான வழிமுறையாகும்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகுந்த ஆளுமைகள். எமது இனத்தின் வளத்திற்கும் செழிப்புக்கும் அடிப்படையானவர்கள். அத்தகைய மனிதர்களை இழந்த இந்த மண் எத்துணை இழப்பை சந்தித்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்? ஈழப் போரில் இலங்கை அரசு இழைத்த அநீதிகளை உலுப்பும் ஒரு ஆயுதமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு பதில் அளித்தே ஆக வேண்டும். இலங்கை அரசு அளிக்கும் பதில் என்பது பல்வேறு உண்மைகளை அம்பலம் செய்வதுடன் இத்தீவின் அமைதிக்கான திறவுகோலாகவும் இருக்கும்.

தமிழ்க்குரலுக்காக தீபச்செல்வன்

இதையும் படிங்க

மாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்

யாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா

அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...

பிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...

மாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது! | ஜூட் பிரகாஷ்

எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...

வான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்

எண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் | கானா பிரபா

ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய...

தொடர்புச் செய்திகள்

மாவீரர் நாள் 2020 | நிலாந்தன்

நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு

ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...

மோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...

ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...

மேலும் பதிவுகள்

தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் | மெல்ல மெல்ல முடங்குகிறதா யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3...

மோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...

ஆப்கானிஸ்தான் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டலும்!

நிரூபர் நூருல் ஹுதா உமர் மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பல்வேறு...

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ | அருந்ததிராய் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும்...

இன்று மாவீரர் தினம்! | வடக்கு கிழக்கில் இராணுவம் பொலிஸ் குவிப்பு!

மாவீரர் தினமான இன்று வடக்கு கிழக்கில் இராணுவம் மற்றும் காவல்துறையை குவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம். நேற்று முல்லைத்தீவு...

பிந்திய செய்திகள்

மாவீரர் நாள் 2020 | நிலாந்தன்

நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

இன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...

துயர் பகிர்வு