எல்லையில் சீனா அத்துமீறல்

எல்லையில் சீனா அத்துமீறல் தொடர்பான பிரச்சினையும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எல்லையில் சீன படைகளின் அத்துமீறும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

சீன படைகளின் அத்துமீறல் காரணமாக இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்த விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள், பட்டியலிடப்படும் சட்டமூலம் உள்ளிட்ட அவை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது, எல்லையில் சீனா அத்துமீறல் தொடர்பான பிரச்சினையும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எனவே, சீனா அத்துமீறல், இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர்