ரஷியாவுக்கு இரகசியமாக உதவியை வழங்கி வந்த எகிப்தின் திட்டம் அம்பலமானது.
உக்ரைன்-ரஷிய போர் ஓர் ஆண்டு கடந்தும் முடிவுக்கு வராத நிலையில் அந்த நாடுகளுக்கு பாதிப்புகளை விட உலகின் அனைத்து நாடுகளும் மக்களும் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது 2 உலக போரிலும் எப்படி நாடுகள் பிரிந்து தங்கள் நட்பு நாட்டுக்காக போர் செய்தனரோ அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக எகிப்து ரஷ்யாவுக்கு இரகசியமாக ஆயுதங்களை தயாரித்து வழங்கி வருவது தெரிய வந்தது . இந்த தகவலை அமெரிக்க உலவுத்துறை வழங்கி இருந்த ரகசிய ஆவணத்தில் குறிப்பிடபட்டுள்ளது .
எகிப்து அதிபர் அப்டெல் எல் -சிசி,மேற்கிந்திய நாடுகளுக்குத் தெரியாமல் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியமை தெரிய வந்தமையால் அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது.