Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் படுகொலை

இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் படுகொலை

0 minutes read

மியன்மாரில்  இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு  வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர் .

ஐநா இதனை வன்மையாக கண்டித்துள்ளது.ஆசிய நாடான மியான்மாரில் 2021ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சியை அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் , இராணுவத்திற்கு  எதிரான அமைப்பினர் சகாயிங் பிராந்தியத்தில் உள்ள பா ஷி ஜியீ கிராமத்தில் அலுவலகம் திறக்க , இந்நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மீது போர் விமானம் குண்டு வீசியுள்ளது. பின்னர் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். தங்களின் வான்வழித் தாக்குதல் கண்ணிவெடிகளுக்கான சேமிப்புப் பகுதியையும் தாக்கியதால் அப்பகுதியில் கூடுதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More