செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா செயற்கை இறைச்சிக்கு அனுமதி!

செயற்கை இறைச்சிக்கு அனுமதி!

0 minutes read

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

செயற்கை இறைச்சிக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2ஆவது நாடு அமெரிக்கா ஆகும்.

ஏற்கெனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.